வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வெலிங்டன்,-பசிபிக் தீவு நாடான நியூசிலாந்தில், ‘கேப்ரியல்’ என பெயரிடப்பட்டுள்ள புயல், ஆக்லாந்து நகருக்கு அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஆக்லாந்திற்கான உள்ளூர் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுஉள்ளது.
![]() |
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் கடந்த மாதம் வரலாறு காணாத மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கேப்ரியல் புயல் உருவாகி, நியூசிலாந்து மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த புயல் ஆக்லாந்து அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நியூசிலாந்து அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆக்லாந்து மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
கேப்ரியல் புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், நாளை வரை கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துஉள்ளது.
இதற்கிடையே, ஆக்லாந்தில் வசிக்கும் மக்கள், அத்தியாவசிய தேவைகள் இன்றி யாரும் வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement