நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பொன்னி ஹார்பெக் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் இருவருக்கும் இடையிலான விசேட சந்திப்பு திருகோணமலை ஆளுநர் அலுவகத்தில் (10) இடம்பெற்றது.
இதன்போது, தூதுவர் இலங்கையில் தற்போதைய அரசியல் நிலமையில் கிழக்கு மாகாணத்தில்; காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாக வினவினார்.
பதிலளித்த ஆளுநர்; கிழக்கு மாகாணம் இயற்கை வளங்களால் நிறைந்ததாகும். இங்கு முதலீடு செய்வதற்கு ஏதுவான சந்தர்ப்பங்கள் வேண்டியளவு காணப்படுகின்றன.
அதைவிடவும் ஒல்லாந்தர் காலத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நிருமாணிக்கப்பட்ட புராதன கட்டடங்களில் புதிய வெளிநாட்டு முதலீடுகளின் அவசியம் குறித்தும் ஆளுநர் யஹம்பத் தெளிவுபடுத்தினார்.
அத்துடன் இவ்வாறான முதலீடுகள் இப்பகுதிக்கு பெறுமதியான செயற்பாடுகள் என்றும், மிக அவசரமாக இம்முதலீடுகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதான செயலாளர் ஆர். எம். பீ. எஸ். ரத்நாயக, மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜே. ஜெகநாதன் உட்பட ஆளுநர் அலுவலக மற்றும் தூதுவராலய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.