நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை 200 மடங்கு அதிகரிப்பு: ஒன்றிய அரசு

டெல்லி: நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை 200 மடங்கு அதிகரித்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிஷன்ராவ் கரத் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள தகவலின்படி, ‘டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்பு பீம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகைத் திட்டத்தை ஒன்றிய அரசு இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்துள்ளது.  இதுதவிர, அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2018-19 ஆம் நிதியாண்டிலிருந்து 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் 200 சதவீதம் உயர்ந்துள்ளது.

2018-19 ஆம் நிதியாண்டில் 2,326.02 கோடி என்ற எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றன. 2021-22 ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 7,197.68 சதவீதமாக அதிகரித்துள்ளது.  டிஜிட்டல் சேவைகளை தடையற்ற முறையில் வழங்க வங்கிகளும் புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் ஏற்று செயல்படுத்துகின்றன. பீம் யுபிஐ, யுபிஐ-123, ஆதார் பரிவர்த்தனை பாலம், ஏஇபிஎஸ் போன்ற பல முன்முயற்சிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கி, தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் மற்றும் வங்கிகளால் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.