வேலூர்: வேலூரிலும் அம்பாலால் குழும நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் நகைக்கடை பஜார் பகுதியில் உள்ள கடை, வீடு, அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையிலும் சோதனை நடைபெறுகிறது.
