ஜப்பான் தீவு முழுவதும் சூழ்ந்த காகங்கள்.! இயற்கை பேரழிவின் தொடக்கமா?


ஜப்பானிய தீவு ஒன்றில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திரமான நிகழ்வின் வீடியோக்களை பீதியை கிளப்பியுள்ளது.

ஆயிரக்கணக்கான காகங்கள் கியோட்டோவிற்கு அருகிலுள்ள ஜப்பானிய தீவான ஹோன்ஷுவில் தரை, வானம், கட்டிடங்கள், வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் பறப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியைந்தனர்.

தீவில் மர்மமான முறையில் காக்கைகள் கூடும் விசித்திரமான வீடியோவை பல பயனர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

ஜப்பான் தீவு முழுவதும் சூழ்ந்த காகங்கள்.! இயற்கை பேரழிவின் தொடக்கமா? | Thousands Of Crows Japanese Island Video Viral

இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், விலங்குகள் அல்லது பறவைகள் அதிக எண்ணிக்கையில் ஒரு இடத்தில் கூடுவது இயற்கை பேரழிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதேபோன்ற ஒரு விசித்திரமான சம்பவத்தில், சீனாவின் மங்கோலியா பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் ஆடுகள் வட்டமாக அணிவகுத்து செல்வதை வீடியோவில் காணமுடிந்தது. அதில் காணப்பட்ட செம்மறி ஆட்டு மந்தை 10 நாட்கள் சாப்பிடவோ, குடிக்கவோ அல்லது தூங்கவோ கூட நிற்காமல் ஒரு வட்டத்தில் அணிவகுத்துச் சென்றதாக்கி தெரிவிக்கப்பட்டது.

ஒரு வட்டத்தில் நடக்கும் செம்மறி ஆடுகள் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், சில அறிக்கைகள் இந்த வினோதமான நடத்தை ஒரு நோய் (circling disease’) என்று கூறுகின்றன. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.