'மோடியை பயங்கரவாதியாக அறிவிக்கவும்..' கனடாவில் இழிவுபடுத்தப்பட்ட ராமர் கோவில்


கனடாவில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலில், இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான வாக்கியங்களுடன் கிராஃபிட்டிகளால் இழுவு படுத்தபட்டுள்ளது.

ராமர் கோவில் மீது தாக்குதல்

கனடாவில் சுதந்திரமாக செயல்பட்டுவருவதாக கூறப்படும் ‘காலிஸ்தானி தீவிரவாதிகள்’ மற்றொரு இந்து மந்திர் இழிவுபடுத்தியுள்ளனர்.

இந்த முறை, ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகாவில் உள்ள ராமர் கோவிலில் இந்திய எதிர்ப்பு மற்றும் காலிஸ்தான் சார்பு கிராஃபிட்டிகளால் தாக்கப்பட்டுள்ளது.

Twitter

இந்த சம்பவத்தை கண்டித்து கனடாவில் உள்ள இந்திய தூதரகம், இதனைச் செய்த குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கனேடிய அதிகாரிகளை வலியுறுத்தியது.

இந்த சம்பவம் பிப்ரவரி 13 அன்று இரவு மிசிசாகாவில் உள்ள ராமர் கோவிலில் நடந்தது. எனினும், சம்பவம் நடந்த நேரம் தெரியவில்லை.

கண்டனம்

“மிசிசாகாவில் உள்ள ராமர் கோயில் இந்தியாவுக்கு எதிரான கிராஃபிட்டிகளால் சிதைக்கப்பட்டதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என ரொறன்ரோவில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாயன்று ட்வீட் செய்தது.

கோவிலின் பேஸ்புக் பக்கத்தில், “கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள மிசிசாகாவில் உள்ள ஸ்ரீ ராம் மந்திரில் ஒரே இரவில் (பிப்ரவரி 13) நாசவேலை நடந்தது. இந்த நிகழ்வால் ராமர் கோவிலில் உள்ள நாங்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளோம், இந்த விஷயத்தில் உரிய சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மோடியை பயங்கரவாதியாக அறிவிக்கவும்’

கோவிலின் சுவர்களில் காலிஸ்தானுக்கு ஆதரவான வாக்கியங்கள் மற்றும் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் வரையப்பட்டுள்ளன. அதில், “மோடியை பயங்கரவாதியாக அறிவிக்கவும்.. சாந்த் பிந்திரன்வாலே தியாகி” என்று எழுதப்பட்டிருந்தது.

Twitter @vaibhavUP65

இந்தியாவுக்கு எதிரான கிராஃபிட்டிகளால் கனடாவில் உள்ள ஒரு இந்து கோயில் சிதைக்கப்படுவது இது முதல் முறையல்ல.

ஜனவரி மாதம், கனடாவில் உள்ள பிராம்ப்டனில் உள்ள ஒரு இந்து கோவில் இந்தியாவை நோக்கி வெறுப்பூட்டும் செய்திகளால் சிதைக்கப்பட்டது, இது இந்திய சமூகத்தினரிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது.


கடந்த செப்டம்பரில், ரொறன்ரோவின் BAPS சுவாமிநாராயண் கோவில் “கனடிய காலிஸ்தானி பயங்கவாதிகளில்” சிதைக்கப்பட்டது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.