ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோட்டில் வாக்காளர்கள் சிறை வைக்கப்படவில்லை என அம்மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். திமுகவினர் வாக்காளர்களை சிறை வைத்துள்ளதாகவும், பணம் கொடுத்து […]
