100 நாட்களில் 14,209 வழக்குகளுக்கு தீர்வு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சிறப்பு| SC takes giant leap towards reforms during first 100 days of Justice Chandrachud’s tenure as CJI

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பதவியேற்ற 100 நாட்களில் 14,209 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த லலித் ஓய்விற்கு பிறகு, 50வது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் 9ம் தேதி டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்றார். இவரின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரை இருக்கிறது. டில்லி பல்கலை.,யில் சட்டம் பயின்ற அவர், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை.,யில் முதுநிலை சட்டப்படிப்பை முடித்து, 1998ல் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினார்.

அதன் பின்னர் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, 2016ல் உச்சநீதிமன்ற நீதிபதி என அடுத்தடுத்து உயர்ந்தார்.

latest tamil news

கடந்த நவம்பரில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்று தற்போது 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த 100 நாட்களில் 14,209 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த காலகட்டத்தில் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டார் சந்திரசூட். அதில் உச்ச நீதிமன்ற மொத்த அலுவல்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தீர்ப்புகள் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டது முக்கியமானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.