சென்னை: ஒன்றிய அரசில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. இணையதளம் முடங்கியதால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதிக்குள்ளான நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டது.
