நெல் கொள்முதலில் கையூட்டா? 90 பேரை பணி நீக்கம் செய்த தமிழ்நாடு அரசு

சென்னை: விவசாயிகளிடம் கையூட்டு பெற்ற புகாரில் 90 நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கடந்த வாரம் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் செய்ய குவிண்டாலுக்கு ரூ.125 கையூட்டு தொடர்பாக உழவர்களின் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழகம் முழுவதும் 2,498 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாய பெருமக்களிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை 16 லட்சம் மெ.டன் அளவிற்கு நடப்பு கொள்முதல் பருவத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாய பெருமக்களின் பெயர் மற்றும் இதர விவரங்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெற்று, முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு இணையதள வாயிலாக 100 சதவீதம் நெல் கொள்முதலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் தற்பொழுது டெல்டா மாவட்டங்களில் கூடுதல் பதிவாளர் தலைமையில் 9 விழிப்பு பணிக்குழு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அதிரடி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மாவட்ட அளவில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் கள ஆய்வுகள் மேற்கொண்டு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டுப்பாட்டு அறை முறைகேட்டில் ஈடுபடும் பணியாளர்கள் மீது தவறின் தன்மைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளவும், அதிகபட்சமாக நிரந்தரமாக பணி நீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விவசாய பெருமக்களும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தவறு ஏதேனும் இருப்பின் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்கள்/மண்டல மேலாளர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக இலவச கட்டுப்பாட்டு அறைக்கும் (1800 599 3540) என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது

மேலும் படிக்க | பாவங்களை போக்கும் மகாசிவராத்திரி பூஜை! செய்ய வேண்டியதும்… செய்யக் கூடாததும்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.