ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் நிகழ்ச்சியான ’ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா’ இப்போது வெளியாகியுள்ளது. இந்த தொடரின் துவக்கத்தில், ஹன்சிகாவும் அவரது தாயும் திருமணத்திற்கு முன் நிகழ்ந்த சிக்கல்களை விவாதித்து, ஹன்சிகாவுடைய கனவு திருமணத்திற்கு குடும்பமாக தயாராகிக்கொண்டிருப்பதை பற்றி கூறுகிறார்கள். ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரபல திருமணங்களில் ஒன்று. இதை நெருக்கமாக காட்டும் இந்த நிகழ்ச்சி தம்பதிகளின் கடந்த காலத்தைப் பற்றிய தகவல்களையும் வெளிக்காட்டுகிறது.
ஹன்சிகாவும் அவரது தாயும் தங்கள் கடந்த காலத்தில் நடந்த பிரச்சனைகளை பற்றியும், அதை சமாளிக்க அவர்கள் எடுத்த முன்னெடுப்புகளை பற்றியும் முதல் எபிஸோட் பேசுகிறது. திருமணத்திற்கு முன்னதாக, ஹன்சிகாவின் தாய் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் ஹன்சிகாவை மீட்டெடுக்க ஆறுதல் கூறுவதை முதல் எபிஸோடில் பார்க்கலாம். சோஹேல் உடைய கடந்த காலம் தொடர்பான செய்திகளால் ஹன்சிகா பாதிக்கப்பட்டுள்ளாரா? என்று ஹன்சிகாவின் தாயார், ஹன்சிகாவிடம் கேட்கும்போது, தனக்கு அப்படியொன்றும் பெரிதாக கவலைகள் இல்லை என்று ஹன்சிகா கூறுகிறார். முன்பு அந்த வருத்தம் இருந்ததாகவும், இப்போது அது தொந்தரவு செய்யவில்லை என்றும் கூறுகிறார்.
சிறு வயதிலயே ஹார்மோன் ஊசி எடுத்து கொண்டதாக வந்த செய்தி உங்களை வருத்தமடைய செய்ததா? என்று ஹன்சிகாவிடம் கேட்டதற்கு, “நண்பா, என்னால் சாதாரண ஊசிகளை கூட எடுக்க முடியாது” என்று பதிலளிக்கிறார். மேலும் அவரது தாயார் இது பற்றி கூறுகையில் “நாங்கள் பஞ்சாபி மக்கள், எங்கள் குழந்தைகள் 12-16 வயதிலேயே பெரிதாக வளர்ந்து விடுவார்கள்” என்று கூறுகிறார்.
எபிசோட் அடுத்த கட்டத்தை எட்டும் போது, மணமகனும், மணமகளும் சேர்ந்து ஜெய்ப்பூருக்கு வந்து திருமணத்திற்குத் தயாராவதை அதில் காணலாம். போலோ போட்டிக்குப் பிறகு, தனது மெஹந்தி நாளில் டெர்பி நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற ஆசை ஹன்சிகாவிற்கு வருகிறது. இது வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றினாலும், அவரது தாயும், திருமணத்தை திட்டமிடுபவரும் அவருடன் நெடுநேரம் இதை பற்றி விவாதிப்பதையும் அதில் காணலாம்.
தனது திருமணத்தில் டெர்பியை நடத்த வேண்டும் என்ற ஹன்சிகாவின் இயல்பிற்கு மாறான கோரிக்கைகள் நிறைவேறுமா? என்ற கேள்வியுடன் ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக தற்போது ஸ்ட்ரீமிங் ஆகிறது. ஹன்சிகாவுடைய பிரம்மாண்ட திருமணத்தைப் பற்றிய பல சுவாரஸ்யங்களை எதிர்பார்க்கலாம்.