இஸ்லாமாபாத் : காதல் மலர்ந்த நாட்களின் போது, பரஸ்பரம் அனுப்பிக் கொண்ட, ‘வாட்ஸ் ஆப்’ குறுந்தகவல்களை தங்கள் கைகளில், பச்சை குத்திக் கொண்ட பாகிஸ்தான் தம்பதியின் செயல், சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பாகிஸ்தானின், இஸ்லாமாபாதைச் சேர்ந்த இளம் தம்பதி அப்பான் – செய்ரட். இவர்கள் காதலித்து திருமணம் செய்து மூன்றாண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், அப்பான் தன் சமூக வலைதள பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதில், இவர்கள் நண்பர்களாக பழகத் துவங்கி, அது காதலாக மலர்ந்த தருணத்தில் இருவரும் பரிமாறிக்கொண்ட வாட்ஸ் ஆப் குறுந்தகவல்களின், ‘ஸ்கிரீன் ஷாட்’கள் இடம் பெற்றுள்ளன.
தங்கள் காதல் வாழ்க்கையின் மிக முக்கியமான குறுந்தகவல்களை, அவர்கள் தங்கள் கைகளில், ‘டாட்டூ’வாக பச்சை குத்திய புகைப்படங்களையும் இணைத்துள்ளனர்.
‘வாழ்க்கை இப்படி துவங்கி, இப்படி போய் கொண்டிருக்கிறது…’ என, அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன. தம்பதி ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள காதலை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement