சுற்றுலா பயணிகளுக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசம்! பிரபல நாடு எடுத்துள்ள திட்டம்


ஹாங்காங்கில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டினருக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

5 லட்சம் விமான டிக்கெட்

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகம் முழுவதும் பரவி ஒட்டுமொத்த மனித செயல்பாட்டுகளையும் முடக்கியது.

பெரும்பாலான நாடுகள் இன்று வரை ஊரடங்கு நடவடிக்கையால் பொருளாதாரம் சீர்குலைந்து சிக்கலில் தவித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உருக்குலைந்த சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், வெளிநாட்டினருக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசம்! பிரபல நாடு எடுத்துள்ள திட்டம் | Hong Kong Is Giving Away 5 Lakh Free Flight Ticket Shutterstock

அத்துடன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், ஹாங்காங் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டினர்  கட்டாயமாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை கூட தளர்த்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த சலுகைகள் சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசம்! பிரபல நாடு எடுத்துள்ள திட்டம் | Hong Kong Is Giving Away 5 Lakh Free Flight Ticket Shutterstock

நிபந்தனை

ஆனால் இவ்வாறு நாட்டிற்குள் வரும் சுற்றுலா பயணிகள் நிச்சயமாக இரண்டு நாட்களாவது ஹாங்காங்கில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அரசு விதித்துள்ளது.

இந்த திட்டத்திற்காக கொரோனா காலத்திலேயே மொத்தமாக விமான டிக்கெட்டுகளை வாங்கி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலா பயணிகளுக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசம்! பிரபல நாடு எடுத்துள்ள திட்டம் | Hong Kong Is Giving Away 5 Lakh Free Flight TicketAP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.