பென்னாகரம் ஞாபகம் இருக்கா? 3வது இடம் படுதோல்வி.. அடுத்த தேர்தலில் எகிறி அடித்த அதிமுக

இடைத்தேர்தல் வெற்றி பொது தேர்தலில் எதிரொலிக்காது என்பது பென்னாகரம் இடைத்தேர்தல் எடுத்துக்காட்டு என்று ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி வெற்றியை விமர்சித்து வருகிறார்கள்.

நெல்லை மாவட்ட தாழையூத்து பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுரங்க நடைபாதையை மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தன்ர். முதலில் பேசிய மத்திய அமைச்சர் வி.கே.சிங்., தாழையூத்து பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டுவது தொடர்பாக நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் சாலைகளை கடப்பதற்கும் பயமில்லாத வகையில் சாலைகளை கடப்பதற்கு இந்த சுரங்க நடைபாதை உகந்ததாக இல்லை. நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றார். அதனை அடுத்து, நாகலாந்து திரிபுரா மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் ஏன் வெற்றியை பெற முடியவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்தில் தற்போது தேர்தல் நடைபெறவில்லை தேர்தல் வரும்போது பாருங்கள். இடைத்தேர்தலை வைத்து கணக்கிடாதீர்கள் பொது தேர்தல் வரட்டும் என தெரிவித்தார்.

தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில்; பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்து தோல்வியடைந்தது அதனை அடுத்து நடைபெற்ற பொது தேர்தலில் அதிமுக ஆளுங்கட்சியாக வந்தது. பல்வேறு காரணங்களுக்காக ஆளுங்கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமைந்துள்ளது. வாக்குக்கு அதிக அளவு பணம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது இடைத்தேர்தலில் வாக்கு வித்தியாசம் பார்க்க கூடாது என தெரிவித்தார்.

பென்னாகரம் இடைத்தேர்தல்

கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் பென்னாகரம் தொகுதியில் பி.என். பெரியண்ணன் எம்எல்ஏ காலமானதால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வன்னியர்களின் கோட்டையாக இருக்கும் பென்னாகரத்தில் செல்வாக்கை காட்ட நினைத்த பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. அதேபோல, வன்னியர்களின் கோட்டையிலேயே பாமகவை வீழ்த்த திமுக பலப்பரீட்சை நடத்தியது. அதன்படி, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 77,637 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக தமிழ்க்குமரன் 41,285 வாக்குகளில் தோல்வி அடைந்தார். அப்போது அதிமுக இரண்டாம் இடத்தை கூட பிடிக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.