திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கடந்த 12ம் தேதி 4 ஏடிஎம் இயந்திரங்களை காஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து ரூ.72.79 லட்சம் கொள்ளையிடப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மட்டும் மீட்கப்பட்டது. அரியானாவில் பதுக்கப்பட்டுள்ள ரூ.70 லட்சத்தை மீட்க தனிப்படையினர் அங்கு விரைந்து உள்ளனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி நிஜாமுதீன் (28) என்பவரை நேற்று அதிகாலை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
