பிரித்தானிய மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா: அலங்கரிக்கப்படும் 700 ஆண்டுகள் பாரம்பரிய நாற்காலி


மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கன்சார்ட் கமீலா ஆகியோரின் முடிசூட்டு விழாவிற்காக 700 ஆண்டுகள் பழமையான முடிசூட்டு நாற்காலி அலங்கரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிசூட்டு விழா

 
பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்த மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி, ராணி கன்சார்ட் கமிலா ஆகிய இருவருக்கும் ராஜா மற்றும் ராணிக்கான அதிகாரப்பூர்வமான முடிசூட்டு விழா மே 6ம் திகதி நடைபெற உள்ளது.

பிரித்தானிய மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா: அலங்கரிக்கப்படும் 700 ஆண்டுகள் பாரம்பரிய நாற்காலி | Britains King Charles Crowning Throne Gets Revamp

இந்நிலையில் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு முன்னதாக, சுமார் 700 ஆண்டுகளாக முடிசூட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிசூட்டு நாற்காலி அலங்கரிக்கப்பட்டு வருவதாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தெரிவித்துள்ளது.

மன்னர் சார்லஸ் ஓக் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது அவரது தலையில் கிரீடம் சூட்டப்படும் நிகழ்வு முடிசூட்டு விழாவின் மையப் பகுதியாக பார்க்கப்படுகிறது.

முடிசூட்டு நாற்காலி

கிங் ஹென்றி VIII, ராணி விக்டோரியா மற்றும் அவரது சொந்த தாய் இரண்டாம் எலிசபெத் போன்ற சில பிரபலமான முன்னோர்களைப் பின்பற்றி, மன்னர் மூன்றாம் சார்லஸும் இந்த முடிசூட்டு நாற்காலியில் அமர்ந்து முடிசூட்டிக் கொள்ள இருக்கிறார். 

பிரித்தானிய மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா: அலங்கரிக்கப்படும் 700 ஆண்டுகள் பாரம்பரிய நாற்காலி | Britains King Charles Crowning Throne Gets Revamp

பல நூற்றாண்டுகளாக ஸ்காட்டிஷ் மன்னர்களின் முடிசூட்டு விழாவிற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்டோன் ஆஃப் ஸ்கோன் அல்லது ஸ்டோன் ஆஃப் டெஸ்டினி ஆகியவற்றை சேர்க்க கிங் எட்வர்ட் I இன் உத்தரவின் பேரில் முடிசூட்டு நாற்காலி உருவாக்கப்பட்டது.

இதற்காக 1296 இல் மன்னர் எட்வர்ட் ஸ்காட்லாந்தில் இருந்து கல்லைக் கொண்டு வந்தார்.

பிரித்தானிய மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா: அலங்கரிக்கப்படும் 700 ஆண்டுகள் பாரம்பரிய நாற்காலி | Britains King Charles Crowning Throne Gets Revamp

முதல் முறையாக 1308 ஆம் ஆண்டு முடிசூட்டு விழாவில் இந்த நாற்காலி இடம்பெற்றது, பின் 1399 ஆம் ஆண்டு ஹென்றி IV இலிருந்து மன்னர்கள் முடிசூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய நாற்காலியாக மாறிவிட்டது என வெஸ்ட்மின்ஸ்டர் அபே தெரிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.