திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் ரூ.114.29 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது. 18.42 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 28ம் தேதி வரை 18.42 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அவ்வாறு சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.114.29 கோடி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 92.96 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 34.6 லட்சம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், 7.21 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் தலை முடியை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
ரூ.3.30 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையானை நேற்று ஒரேநாளில் 58,137 பேர் தரிசித்தனர். 26,805 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில் ₹3.30 கோடி காணிக்கை கிடைத்தது. வாரவிடுமுறை காரணமாக இன்று காலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. நேர ஒதுக்கீடு டிக்கெட் பெறாமல் வந்த பக்தர்கள் 12 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.