உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு


உள்ளூராட்சி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தடுத்து வைத்துள்ளமையை தவிர்க்குமாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை தாம் மதிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

நீதிமன்ற தீர்ப்பை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும்.

அது அனைவரினதும் பொறுப்பாகும்.

அதன்படியே, நிதியமைச்சும் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய செயற்படும் என தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவு

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு | Ministry Of Finance Local Government Elections

இதே வேளை தேர்தலுக்கான அச்சகப் பணிகளுக்கு தேவைப்படும் நிதியை வழங்காதிருக்கும் நிதி அமைச்சின் செயற்பாட்டிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில், நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர் சார்பில் சட்டமா அதிபர் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.