டெல்லிக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி: அண்ணாமலைக்கு பிரஷர் – இனிமேல் இப்படி தானா?

மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சமயத்தில் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அப்படி நடைபெற வாய்ப்பில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பாஜக பாலிடிக்ஸ்!பாஜக மத்தியில் ஆட்சியமைத்ததிலிருந்து நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களது கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான வேலைகளை தொடங்கினர். சில பத்தாண்டுகள் களப் பணி செய்து பல தேர்தல்களை சந்தித்து கட்சிகள் கால் ஊண்றும் போது ஓரிரு ஆண்டுகளில் எவ்வாறு கட்சியை பலப்படுத்துவது என்ற கேள்விக்கும் அதன் தலைமை பதில்களை தயாராக வைத்திருந்தது.
பாஜக வளரும் விதம்!புதிதாக விதை போட்டு தண்ணீர் ஊற்றி, செடியாக வளர்ந்து, மரமாகும் வரை காத்திருந்து காய் பறிக்க நேரம் இல்லை, எனவே பிற இடங்களில் உள்ள மரங்களை வேரோடு பிடுங்கி வந்து இங்கே நட்டு காய் பறிப்போம் என டெல்லி பாஜக திட்டமிட்டது. அந்த வகையில் பிராந்திய கட்சிகளில் செல்வாக்கான நபர்களை பொறி வைத்து தூக்கி வந்து பாஜகவில் முக்கிய பதவி கொடுத்து அந்த மாநிலங்களில் கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
நயினார் நாகேந்திரன்நீண்ட காலத்துக்கு இது பலன் அளிக்குமா என்று தெரியாவிட்டாலும் பல இடங்களில் இதன் மூலம் நன்றாகவே மகசூல் பார்த்துவிட்டது பாஜக. அவ்வாறு ஆள் தூக்கி வருவது எதிர் கட்சி கூட்டணிகளிலிருந்து மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளில் இருந்தும் கூட நடைபெறுகிறது. கூட்டணி தர்மம் என்ற வார்த்தை எல்லாம் இந்த இடத்தில் செல்லுபடியாகாதாம். உதாரணத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவுக்கு கொண்டு வரப்பட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.
நிர்மல் குமார்பாஜகவின் இந்த ஆள் தூக்கும் அரசியலை அந்த கட்சியிடமே நடத்திக் காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதோடு மட்டுமல்லாமல் அண்ணாமலையை நிர்மல் குமார் ‘420 மலை’ என்றும் கடுமையாக விமர்சித்துவிட்டு வந்து அதிமுகவில் தஞ்சம் புகுந்துள்ளார். கூட்டணிக் கட்சித் தலைவரை கடுமையாக விமர்சித்தவரை அருகே அழைத்து வைத்துக் கொள்ளலாமா என்று பாஜகவுக்குள் சலசலப்பு உருவாகியுள்ளது.
பாஜகவுக்கு எடப்பாடி சொல்லும் மெசேஜ்இதே அரசியலை அவர்கள் செய்யும் போது இனித்தது, இப்போது கசக்கிறதா என்று அதிமுகவுக்குள் பதில் கேள்விகள் முளைக்கின்றன. எடப்பாடி பழனிசாமி இதன் மூலம் பாஜகவுக்கு ஒரு மெசேஜ் சொல்கிறார் என்கிறார்கள். பாஜக இப்போதும் ஒருங்கிணைந்த அதிமுக தான் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று தொடர்ந்து கூறிவருகிறது. ஓபிஎஸ், சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க அழுத்தம் கொடுக்கிறது. அதெல்லாம் முடியாது என்று பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே எடப்பாடி பழனிசாமி நிர்மல் குமாரை வரவேற்று அருகில் வைத்துள்ளார்.
திமுகவுக்கும் நெருக்கடிதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தும் நிர்மல் குமாரை வைத்து திமுகவுக்கும் குடைச்சல் கொடுக்க முடியும் என எடப்பாடி பழனிசாமி நினைப்பதாக சொல்கிறார்கள். மக்களவைத் தேர்தலில் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி அப்போது கூறியிருந்தாலும் தேர்தல் வரும் வரை தாமரையோடு ஒட்டியும் ஒடாமலே இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.