நெய்வேலி: என்எல்சிக்கு விரிவாக்கம் தொடர்பாக, மேலும்இ புதிதாக நிலங்கள் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கான உயர் இழப்பீடு எனும் கருணைத்தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் வேளாண் மற்றும் உலக நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 2006 முதல் 2013 ம் ஆண்டு வரை என்எல்சிக்கு நிலம் கொடுத்த 9 பேருக்கு உயர் இழப்பீட்டுத் தொகையாக 23.3லட்சத்தை வழங்கினார். […]
