
திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற டாடா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் வெளியான ’டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, நல்ல வர வேற்பை பெற்றது.
படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து கவனம் பெற்ற அபர்ணாதாஸ் நடித்துள்ளார். பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நகர்ப்புறங்களில் மல்டிப்ளக்ஸ் ரசிகர்களை இந்த படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. வாத்தி மற்றும் பகாசூரன் என இரண்டு புது ரிலீஸ் படங்கள் ரிலீஸான பிறகும் டாடா திரைப்படத்திற்கு கணிசமான கூட்டம் வருகிறது.
இந்நிலையில் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற மார்ச் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. திரையரங்கில் பார்க்காதவர்கள், ஓடிடி தளத்தில் பார்ப்பார்கள் என்பதால், டாடா மீண்டும் ட்ரெண்ட் ஆக வாய்ப்பு உள்ளது.
newstm.in