'CWC 4' நிகழ்ச்சியை விட்டு விலகியதும் மணிமேகலை செய்த முக்கிய செயல்!

17 வயதில் சன் மியூஸிக்கில் விஜே-வாக தனது பணியை தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் மணிமேகலை.  விஜே மணிமேகலை மற்றும் விஜே அஞ்சனா இருவருக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பிய 90’ஸ் கிட்ஸ் பலர் உண்டு.  மற்ற நிகழ்ச்சிகளில் இவர் பங்குபெற்றாலும் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.  சில சமயம் இவரின் நடிப்பு சிலருக்கு கிரிஞ்சாக தோன்றினாலும், மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது, மூன்று சீசன்களிலும் பலரின் கவனத்தை ஈர்த்து வந்த மணிமேகலை தற்போது இந்த நிகழ்ச்சியை விட்டு விலகிவிட்டார்.

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியை விட்டு விலகியதற்கு அவர் எந்தவொரு காரணத்தையும் கூறவில்லை, இருப்பினும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு ரைட்டப் மற்றும் போட்டிருந்தார்.  ‘ 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி முதல் சீசனில் நான் பங்குபெற்றபோது என்னுடைய பெர்ஃபார்மனஸுக்கு பலரும் ஆதரவு கொடுத்தீர்கள்.  ஒவ்வொரு சூழ்நிலையிலும் என் திறமையை நிரூபிக்க நான் கடினமாக முயற்சி செய்திருக்கேன்.  நான் குக் வித் கோமாளி மூலம் உங்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளேன் என்று நம்புகிறேன்.  நான் உங்களிடமிருந்து இவ்வளவு அன்பை எதிர்பார்க்கவில்லை, இதேபோல நான் என்ன செய்தாலும் நீங்கள் எனக்கு அன்பை கொடுங்கள்’ என்று எழுதியிருந்தார்.

மணிமேகலை சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி அதையும் சிறப்பாக நடத்தி வருகிறார், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேறி காட்டும் வகையில் அவர் கடினமாக உழைத்து வருகிறார்.  தற்போது அவரது கிராமத்தில் சொந்தமாக நிலம் வாங்கி ஒரு பண்ணை வீடு கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கியுள்ளார்.  இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஹெச்எம் பண்ணை வீடு பாலக்கால் பூஜை, கடவுளின் அருளாலும், கடின உழைப்பாலும் எண்களின் குட்டி ராஜ்ஜியத்தை உருவாக்க போகிறோம், நாங்கள் கிராமத்திற்கு செல்லும்போதெல்லாம் இது எங்களது மகிழ்ச்சியான இடமாக இருக்கப்போகிறது, எப்போதும் எங்களை வாழ்த்துங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.