AK62, Ajith: அஜித்துக்கு வில்லனாகும் பாக்ஸர் நடிகர்: அடடே, அவங்க ஏற்கனவே சேர்ந்து நடிச்சிருக்காங்களே

துணிவு படத்தை அடுத்து அஜித் குமார் நடிக்கவிருக்கும் படத்தை தற்போதைக்கு ஏ.கே. 62 என்று அழைக்கிறார்கள். அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடிப்பார், அருள்நிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியானது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

விசாரித்துப் பார்த்ததில் அஜித் படத்தில் அருண் விஜய்யும் இல்லை, அருள்நிதியும் இல்லை என்பது தெரிய வந்தது. இந்நிலையில் அஜித்துக்கு வில்லனாக தன் மீகாமன் பட நடிகர் ஆர்யாவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் மகிழ்திருமேனி என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்துக்கு வில்லன் ஆர்யா தான் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை எதையும் நம்ப முடியாது.

AK62:த்ரிஷா, நயன்தாரா வேண்டாம், காந்தக் கண்ணழகியை அஜித் ஜோடியாக்கும் லைகா?

இதற்கிடையே அஜித் குமார் படத்தில் காஜல் அகர்வாலை ஹீரோயினாக நடிக்க வைக்குமாறு லைகா நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறதாம். காசு போடுபவர்களே ஒரு ஹீரோயினை பரிந்துரைத்திருப்பதால் அஜித் படத்தில் காஜலை தான் நடிக்க வைப்பார் மகிழ்திருமேனி என கூறப்படுகிறது.

அஜித் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து லைகா நிறுவனத்தின் ட்விட்டர் பக்கமே கதி என்று இருக்கிறார்கள் ஏ.கே. ரசிகர்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் அப்டேட்டை தவிர பிற அப்டேட் எல்லாம் சரியாக வருகிறது.

இதை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,

அஜித் படத்தின் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மாறினாலும் அப்டேட் கேட்டு ரசிகர்கள் கெஞ்சுவது மட்டும் மாறுவது இல்லை. ஒழுங்காக அப்டேட் கொடுப்பதற்கு பெயர் போன லைகா நிறுவனமே அஜித் விஷயத்தில் விளையாட்டு காட்டுகிறது. எல்லாம் அஜித் ரசிகர்களின் ராசி அப்படி என தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை ஒரு முக்கிய அப்டேட் வருகிறது என லைகா நிறுவனம் ட்வீட் செய்தால் உடனே அது ஏ.கே. 62 படம் குறித்தது தான் என அஜித் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் லைகா தயாரிக்கும் வேறு படத்தின் அப்டேட் வருவதை பார்த்து கோபமும், கவலையும் அடைகிறார்கள்.

இதற்கிடையே பைக்கில் உலகம் சுற்றச் செல்ல வேண்டும் என்பதால் படத்தை சீக்கிரமாக முடிக்குமாறு மகிழ்திருமேனிக்கு அஜித் குமார் பிரஷர் கொடுப்பதாக கூறப்பட்டது. ஆனால் அஜித் அப்படி எதுவும் சொல்லவில்லையாம்.

Ajith: ஏ.கே. 62 இல்ல ஆனால் வேறு ஒரு தரமான அப்டேட் கொடுத்த அஜித் மேனேஜர்

மகிழ்திருமேனி பட வேலையை முடித்துவிட்டு தான் பைக் டூர் கிளம்புகிறாராம். அந்த டூருக்கு பரஸ்பர மரியாதை பயணம் என பெயர் வைத்திருக்கிறார். இந்த பரஸ்பர மரியாதை பயணம் குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ட்வீட் செய்தார். படம் குறித்த அப்டேட்டை எதிர்பார்த்த நிலையில் பைக் டூர் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது.

இதற்கிடையே தான் குத்துச் சண்டை வீரனாக நடித்த சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது குறித்து ட்வீட் செய்துள்ளார் ஆர்யா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.