புலம்பெயர்வோருக்கு எதிரான பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டம் சர்வதேச விதி மீறல்: ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை


பிரித்தானிய பிரதமரின் புகலிடக்கோரிக்கை திட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒன்று கவலை தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் சர்வதேச விதியை மீறுவதுடன், அது ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதை தடுக்க தேவையற்றது என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கெதிராக கடுமையான சட்டம்

நேற்று பிரித்தானியா அரசு, பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்வோருக்கு எதிரான புதிய சட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டது.

புலம்பெயர்வோருக்கு எதிரான பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டம் சர்வதேச விதி மீறல்: ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை | United Nations Concern

@getty

அப்படி பிரித்தானியாவுக்குள் நுழைவோர் வெளியேற்றப்படுவதுடன், மீண்டும் அவர்கள் எந்தக் காலத்திலும் பிரித்தானியாவில் புகலிடம் கோரவோ, குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவோ முடியாது என அந்த சட்டம் கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் அகதிகள் ஏஜன்சி கவலை

இந்நிலையில், பிரித்தானியாவின் திட்டம் கவலையை அளிப்பதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஏஜன்சி கவலை தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் பிரதிநிதியான Vicky Tennantஇடம் இது குறித்துக் கேள்வி எழுப்பியபோது, இது அகதிகள் ஒப்பந்தத்தை தெளிவாக மீறுவதாகவும், கட்டாயம் புகலிடம் தேவை என்னும் நிலையில் உள்ளவர்களுக்குக் கூட புகலிடம் கோர வாய்ப்புக் கிடைக்காத ஒரு நிலையை இத்திட்டம் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார் அவர்.

ஆகவே, மக்களால் புகலிட கோர இயலாத நிலை இருந்தால், அவர்களை அவர்களுடைய நாட்டுக்கு அனுப்புங்கள், அவர்கள் புகலிடம் கோர தகுதியுடையவர்கள் என்றால்,

அவர்களை பிரித்தானியாவுடன் ஒன்றிணைந்து வாழ அனுமதித்து, புகலிடம் வழங்கும் நடைமுறையை மிக விரைவாக செயல்படுத்துங்கள் என்றும் கூறியுள்ளார் அவர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.