2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய மறுநிமிடமே, ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்களுடைய ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்திருந்தனர் தலிபான் அமைப்பினர்.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டையும், ஆட்சியையும் தலிபான்கள் கைப்பற்றியது முதலே, அங்கு கட்டுப்பாடுகள் என்கிற பெயரில், அடக்குமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்களை ஒடுக்குகின்றனர். அதாவது, ஆண்கள் துணையின்றி பொது இடங்களுக்கு பெண்கள் செல்ல தடை, விமானத்தில் பயணிக்க தடை, ஆடை கட்டுப்பாடு என பெண்களுக்கான தடைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் கடந்த ஆட்சியின்போது, பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது என அறிவித்து
கணவர்களுடன் சேர்ந்து வாழ பெண்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டு இருக்கிறது. ஆப்கனில் 10-ல் 9 பெண்கள் தங்கள் கணவர்களால் கொடுமைக்கு ஆளாவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தை அடுத்து, அமெரிக்கா ஆதரவுடன் நடந்த கடந்த ஆட்சியில் பெண்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. மீண்டும் ஆட்சியை பிடித்த தாலிபான் அரசு, ஏற்கெனவே கொடுக்கப்பட்ட விவாகரத்து செல்லாது என அறிவித்ததுடன், பிரிந்த கணவனுடன் பெண்கள் சேர்ந்து வாழ வேண்டும் என வலுக்கட்டாய உத்தரவு பிறப்பித்து இருப்பது, ஆப்கான பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேநேரத்தில் இது முட்டாள் தனமான அறிவிப்பு என்பதும் தெளிவாகிறது. ஏற்கெனவே விவகாரத்து பெற்ற பெண்கள் பலர், மறுமணம் செய்திருக்க கூடிய நிலையில், அவர்களின் விவகரத்து செல்லது, மீண்டும் பிரிந்த கணவருடன் இணைய வேண்டுமென்றால், தற்போதைய கணவரை விட்டு, கடந்த கால கணவருடன் இணைய வேண்டும் என்கிற நிலையில் தலிபான்கள் அறிவிப்பு செய்திருக்கிறார்கள். இது முட்டாள்தனமான அறிவுப்பு என ஒரு சாரர் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
இப்படி இடியாப்ப சிக்கலில் சிக்கியிருக்க கூடிய பெண்கள், ஆப்கானை விட்டு வெளிநாட்டில் தஞ்சமடைய வேண்டிய சூழல் இருப்பதாகவே அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.