கொடூரமான துஷ்பிரயோகம்… 400 ஆண்டுகள்: இழப்பீடு தரக் கோரும் பிரித்தானிய எம்.பி


பிரித்தானியாவின் முன்னாள் கரீபியன் காலனி நாடுகளுக்கு, 400 ஆண்டுகள் இழைத்த கொடுமைகளுக்காக கண்டிப்பாக இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கரீபியன் நாடுகளுக்கு

கிரெனடா நாட்டில் தங்கள் மூதாதையர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய கோடீஸ்வர குடும்பத்தினரை நினைவூட்டிய தொழில் கட்சி எம்.பி கிளைவ் லூயிஸ், கரீபியன் நாடுகளுக்கு பிரித்தானியா அரசாங்கமும் இழப்பீடு அளிப்பதில் தவறில்லை என்றார்.

பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பிரித்தானியா தனது கடந்த காலத்தை எதிர்கொண்டு அதைச் சரிச் செய்ய உறுதியளிக்க வேண்டும் என்று லூயிஸ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தான் கிரெனடா பிரதமர் டிக்கன் மிட்செல் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை வெளிப்படையான ஒரு விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை அடிப்படைவாதிகள் சிலர் முறியடிக்கலாம்,
ஆனால் காலனித்துவம் மற்றும் அடிமைத்தனம் தொடர்பில் நமது சொந்த வரலாற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அதன் தாக்கம் உலகெங்கிலும் மற்றும் இங்கிலாந்திலும் மில்லியன் கணக்கான மக்கள் மீது ஏற்படுத்துகிறது மற்றும் தொடர்கிறது என லூயிஸ் தெரிவித்துள்ளார்.

கொடூரமான துஷ்பிரயோகம்... 400 ஆண்டுகள்: இழப்பீடு தரக் கோரும் பிரித்தானிய எம்.பி | Pay Reparations To Caribbean Colonies

@getty

பில்லியன் கணக்கான பவுண்டுகள்

மட்டுமின்றி, முன்னாள் அடிமை உரிமையாளர்களுக்கு இன்றைய பணத்தில் பில்லியன் கணக்கான பவுண்டுகள் இழப்பீடாக வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2015க்கு பின்னர் அவ்வாறான ஒரு நிகழ்வும் ஏற்படவில்லை என்றும் அதில் லூயிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வந்த 400 வருடங்களாகக் கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் முன்னாள் அடிமை எஜமானர்களுக்கு வரி செலுத்தினர் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.

ஆனால் Trevelyan குடும்பம் கிரெனடா நாட்டில் தங்கள் மூதாதையர்கள் இழைத்த கொடுமைகளுக்கு இழப்பீடாக தற்போது 100,000 பவுண்டுகள் தொகையை அங்குள்ள பொருளாதார மேம்பாட்டுக்காக அளித்துள்ளதை லூயிஸ் பாராட்டியுள்ளார்.
அத்தகைய முடிவை பிரித்தானியாவும் எடுக்க வேண்டும் என லூயிஸ் கோரிக்கை வைத்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.