வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காத்மாண்டு: நேபாளம் புதிய அதிபராக ராம் சந்திரா பவுடால் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேபாளம் அதிபராக இருந்த பித்யா தேவி பணடாரி பதவி காலம் மார்ச் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.
இதில் நேபாளம் காங்கிரஸ், சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) உள்பட எட்டு கட்சிகள் ஆதரவுடன் ராம் சந்திரா பவுடால் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து சி.பி.எம். (யு.எம்.எல்.) கட்சி சார்பில் சுபாஷ் சந்திர நெம்பவாங் போட்டியிட்டார்.
![]() |
நேபாள பாராளுமன்ற மற்றும் மாகாண சட்டசபைகளில் இருந்து 884 உறுப்பினர்கள் அதிபரை தேர்வு செய்ய ஓட்டளித்தனர். இதில் ராம்சந்திரா பவுடால் 33 ஆயிரத்து 802 வாக்குகள் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட சுபாஷ் சந்திர நெம்பவாங் 15 ஆயிரத்து 518 வாக்குகள் பெற்றார். பெரும்பான்மை பெற்ற ராம் சந்திரா அதிபராக தேர்வு பெற்றார். துணை அதிபர் தேர்தல்
வரும் 17-ம் தேதி நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement