திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்; திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது. சமூக நீதிக் கோட்பாடுதான் நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவுக்கு வர காரணமாக உள்ளது. மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர்; அதை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்தார்கள்; மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின் மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டார் கலைஞர்: இஸ்லாமியர்கள் வேறு, தாம் வேறு என்று கலைஞர் நினைத்தது இல்லை எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.