பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளம் செல்ல அனுமதி: தீர்ப்பிற்கு பெர்லினில் குவியும் வரவேற்பு


ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலாடையின்றி நீந்த அனுமதி

பெர்லினின் பொதுக் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு நகர அதிகாரிகள் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்துள்ளனர்.

திறந்தவெளி நீச்சல் குளம் ஒன்றில் மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பெண் ஒருவரை வெளியேற சொன்ன பிறகு, அந்த பெண் எடுத்த சட்ட நடவடிக்கையை தொடர்ந்து இந்த தீர்ப்பு வந்துள்ளது.

பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளம் செல்ல அனுமதி: தீர்ப்பிற்கு பெர்லினில் குவியும் வரவேற்பு | Germany Berlin To Allow Women To Go ToplessGetty

மேலும் டிசம்பரில் உட்புறக் குளத்தில் இருக்கும் போது உடலை மறைக்க சொன்னதாக இரண்டாவது பெண் ஒருவரும் தெரிவித்துள்ளார்.

விசாரணை

பெண்ணின் வழக்கை விசாரித்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பெண் பாகுபாட்டிற்கு ஆளாகி இருப்பதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து பெர்லினின் குளங்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் மேலாடையின்றி செல்ல உரிமை பெற்றுள்ளனர் என்று தீர்ப்பு வழங்கினர்.

பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளம் செல்ல அனுமதி: தீர்ப்பிற்கு பெர்லினில் குவியும் வரவேற்பு | Germany Berlin To Allow Women To Go ToplessPTI

இதனை Freikörperkultur என்று அழைக்கப்படும் “சுதந்திர உடல் கலாச்சார” சங்கமம் வரவேற்றுள்ளது.

பொதுவாகவே ஜேர்மனி பொது நிர்வாணத்தை பொருத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் கருதும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது. 

பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளம் செல்ல அனுமதி: தீர்ப்பிற்கு பெர்லினில் குவியும் வரவேற்பு | Germany Berlin To Allow Women To Go ToplessUNSPLASH/Jim Carroll



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.