ஹம்பர்க் :ஜெர்மனியில் தேவாலயத்தில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், எட்டு பேர் பலியாகினர்; பலர் படுகாயம் அடைந்தனர்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் கிறிஸ்துவர்களின் யெகோவா தேவாலயம் உள்ளது.
இங்குள்ள பிரார்த்தனை கூடத்திற்கு நேற்று வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதில் எட்டு பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயம் அடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், தாக்குதல் நடத்தியவர் தப்பி ஓடி விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தாக்குதல் சம்பவத்திற்கு ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது ஒரு கோழைத்தனமான செயல் எனவும் விமர்சித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியது யார்? எதற்காக இந்த தாக்குதல் நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement