சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு புதிதாக வாங்கப்படும் மின்சாரப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். சென்னையில் தனியார் பேருந்து சேவை தொடர்பாக சென்னை மாநகராட்சி டெண்டர் வெளியிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அமைச்சர், தனியார் சேவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அரசு பேருந்து சேவையில் எந்தவொரு மாற்றமும் கிடையாது என விளக்கம் அளித்தார். […]
