பெண்ணின் காதில் கேட்ட குரல்… நம்பி வாங்கிய லொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம்


அமெரிக்கப் பெண் ஒருவர் வீட்டுக்காக மளிகை சாமான் வாங்கிக்கொண்டிருக்கும்போது, திடீரென அவர் காதில் ஒரு சத்தம் கேட்டதாம். அந்த சத்தத்தின்படி அவர் செய்ததால் இன்று கோடீஸ்வரியாகியிருக்கிறார். 

பெண்ணின் காதில் ஒலித்த சத்தம்

வட கரோலினாவைச் சேர்ந்த Wendy Hester, மளிகை சாமான் வாங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.அப்போது யாரோ அவர் காதில், ’லொட்டரி வாங்கு’ என கூறியதுபோல் இருந்ததாம் உடனே அவர், 8 பவுண்டுகள் கொடுத்து லொட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கியிருக்கிறார்.

பிறகு Wendyக்கு அந்த லொட்டரியில்ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது தெரியவரவே ஆச்சரியத்தில் திகைத்துப்போயிருக்கிறார் அவர்.
உடனடியாக தன் கணவரை அழைத்து, எனக்கு ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்திருக்கிறது.

பெண்ணின் காதில் கேட்ட குரல்... நம்பி வாங்கிய லொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம் | The Voice Heard In The Woman S Ear

Credit: Newsflash

நாம் நமக்கு ஒரு வீடு வாங்கிவிடலாம் என்று கூறியிருக்கிறார் Wendy. வீடு வாங்கும் Wendyயின் ஆசை நிறைவேறப்போவதுடன், அவர் கார் வாங்கிய கடனையும் அடைத்துவிடப்போகிறாராம்.

ஆக, Wendyயின் காதில் கேட்ட குரலை அலட்சியம் செய்யாமல் அவர் வாங்கிய லொட்டரியால், இன்று கோடீஸ்வரியாகியிருக்கிறார் அவர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.