சென்னை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் சமீப காலமாக இன்புளுயன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழ்நாட்டில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரியில் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சலையடுத்து, புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில்எ 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 11 நாட்கள் […]
