நாளை முதல் திட்டமிட்டப்படி பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.பால் கொள்முதல் விலை குறித்து அமைச்சர் நாசர் உடனான பேச்சுவார்த்தை தோல்வி.
ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பசும் பாலுக்கு 42 ரூபாயும் எருமை பாலுக்கு 51 ரூபாயுமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது கோரிக்கை.பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் நிர்வாகம் நாளொன்றுக்கு 27 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து வரும் நிலையில்,நாளை முதல் திட்டமிட்டப்படி பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது