சென்னை: பால் கொள்முதலில் பிரச்சனை இல்லை; வழக்கம்போல் பால் கொள்முதல் நடைபெற்றதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரு சில சங்கங்கள் தவிர இதர சங்கங்கள் வழக்கமான அளவுக்கு பால் வழங்கியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் பால் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்றது. சில தனியார் நிறுவனங்கள் நிலைமையை பயன்படுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சிகள் முறிக்கப்பட்டுள்ளது.