
திருமணத்திற்குப் பரிசாக வந்த ஹோம் தியேட்டர் திடீரென வெடித்த விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சமரி கிராமத்தைச் சேர்ந்த ஹேமேந்திரா மேராவி என்ற இளைஞருக்கு மார்ச் 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது புது தம்பதிகளுக்கு பரிசாக ஹோம் தியேட்டர் வழங்கப்பட்டது.
இதையடுத்து ஹோம் தியேட்டரை வீட்டில் கனெக்ட் செய்து பாடல் கேட்டபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் ஹோம் தியேட்டர் வெடித்தது. இதனால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இடிபாட்டில் வீட்டில் இருந்த அனைவரும் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் அவர்களை மீட்க முயன்றனர். அப்போது புதுமாப்பிள்ளை ஹேமேந்திரா மேராவி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மாப்பிள்ளையின் சகோதரர் ராஜ்குமார் மற்றும் ஒருவயது சிறுவன் உட்பட 4 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்குச் சகோதரர் ராஜ்குமார் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஹோம் தியேட்டர் வெடித்ததால்தான் விபத்து ஏற்பட்டதா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in