`வசீகரமான உடலமைப்பு’ 2022-ம் ஆண்டில் செல்லப்பிராணிகளில் முதலிடத்தை பிடித்த 'பிரஞ்சு புல்டாக்' நாய்!

பிரஞ்சு புல்டாக் இன நாய் கடந்த பத்து வருடங்களில் பிரபலமடைந்து தரவரிசையில் முன்னேறி 2022-ம் ஆண்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று அமெரிக்க கென்னல் கிளப் அறிவித்துள்ளது. 2012-ல் இந்த பிரஞ்சு புல்டாக் இன நாய்கள் தரவரிசை பட்டியலில் 14-ம் இடத்தில் இருந்தது. அதற்குப் பிறகு இந்த இனத்தைத் தேடி வளர்ப்பவர்களின் எண்ணிக்கை 1000% அதிகரிக்கவே தற்போது முதல் இடத்தில் உள்ளது.

பிரஞ்சு புல்டாக்

2021-ல் செல்லப்பிராணிகள் தேர்வில் இந்த இனம் இரண்டாவது இடத்தில் இருந்தது. பிரஞ்சு புல்டாக் ஒரு புத்திசாலித்தனமான மற்றும் கச்சிதமான உடலமைப்பைக் கொண்ட நாய் இனம். மேலும் இவை உயர்தர, நடுத்தர வாழ்க்கை முறைக்கும் பொருந்தக்கூடியவை. அதனால் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஏற்றது. இந்த நாய் குட்டி முதன்முதலில் 1898-ல் AKC யால் (American Kennel Club) அங்கீகரிக்கப்பட்டது.

இந்த பிரஞ்சு புல்டாக் நாய் இனத்தின் சிறப்பு என்னவென்றால் மனிதர்களை வசீகரிக்கும். அதேசமயம் இடத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் இயல்புடையது. குடும்பங்கள் முதல் தனி மனிதர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது. இந்த இன நாய்களின் சிறிய உடலமைப்பு மற்றும் அமைதியான சுபாவம் ஆகியவற்றால் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சிறிய வீடுகளிலும் வளர்ப்பதற்கு ஏற்றதாக உள்ளது. அதனால் நகரத்து மக்களின் செல்லப்பிராணிகள் தேர்வில் முதல் இடத்தில் உள்ளது.

பிரஞ்சு புல்டாக்

பிரஞ்சு புல்டாக் கடந்த பத்து ஆண்டுகளாக தர வரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்து வந்திருக்கிறது. முதல் இடத்தில் இருந்த லாப்ரடார் (Labrador Retriever) இன நாய்களை பின்னுக்குத் தள்ளி இப்போது முதல் இடத்துக்கு வந்துள்ளது. இதைத்தவிர Golden Retriever, German Shepherd மற்றும் Poodle ஆகியவை முறையே முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.