அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
இந்திய டெலிகாம் சந்தையில் OTT வசதிகளுடன் கூடிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. 3359ரூ, 839ரூ, 499ரூ, 399ரூ என நான்கு ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளன. இந்த நான்கு திட்டங்களில் மூன்று திட்டங்கள் 3 மாதங்களுக்கான டிஸ்னி திட்டங்களை கொண்டுள்ளன. இதன் 3359ரூ திட்டம் மூலமாக நமக்கு 1 வருடத்திற்கான Disney+Hotstar திட்டம் கிடைக்கும். இதன் மற்ற வசதிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Airtel 399 திட்டம்
மிகவும் விலை குறைந்த திடமான இதில் நமக்கு 3 மாதங்கள் Disney+Hotstar திட்டம் கிடைக்கிறது. இதில் ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100SMS என 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் அன்லிமிடெட் 5G வசதியும் நமக்கு கிடைக்கும். இதனுடன் Xstream App, Apollo 24/7, Free Hellotunes, 100 Cashback FASTag என 28 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
Airtel 499 திட்டம்
இந்த திட்டம் மூலமாக நமக்கு ஒரு நாளைக்கு 3GB டேட்டா, 100SMS, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், அன்லிமிடெட் 5G, Xstream App, Apollo 24/7, 100FASTag Cashback, இலவச ஹலோ டியூன்ஸ் என 28 நாட்களுக்கு கிடைக்கிறது. இதில் Disney+Hotstar திட்டம் 3 மாதங்களுக்கு கிடைக்கிறது.
Airtel 839 திட்டம்
இதில் ஒரு நாளைக்கு 2GB டேட்டா, 100SMS, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், அன்லிமிடெட் 5G, Xstream App, Apollo 24/7, 100 FASTag cashback, இலவச ஹலோ டியூன்ஸ் என 84 நாட்களுக்கு கிடைக்கிறது. இதிலும் 3 மாதங்கள் Disney+Hotstar பயன்படுத்தலாம்.
Airtel 3359 திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த OTT திட்டமான இதில் நமக்கு ஒரு வருடம் Disney+Hotstar திட்டம் கிடைக்கிறது. இதில் நாம் ஒரு வருடத்திற்கு 2.5GB டேட்டா, அன்லிமிடெட் 5G, இலவச ஹெலோ டியூன்ஸ் போன்ற வசதிகள் கிடைக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்