வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: கூடுதல் மனிதாபிமான உதவிகளைக் அளிக்க கோரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்- ரஷ்யா இடையே, கடந்த ஆண்டு பிப்.,24ல் போர் துவங்கியது. கடந்த ஓராண்டாக நடந்து வரும் இப்போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு எதிர்கொண்டு வருகிறது. உக்ரைனின் வெளியுறவுத் துறை முதல் இணையமைச்சர் எமினே சபரோவா இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக வந்தார். அப்போது அவர் பிரதமர் மோடிக்கு, ஜெலன்ஸ்கி எழுதிய கடிதத்தை இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேஹியிடம் வழங்கியுள்ளார்.
உதவிக் கோரி, பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
போரை எதிர்க்கொள்ள மருத்துவ உபகரணங்கள் உட்பட கூடுதல் மனிதாபிமான உதவிகளை செய்ய வேண்டும். போரின் காரணமாக மருத்துவம் பயின்று வந்த மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வசிக்கும் நாட்டில் தேர்வு எழுத சலுகைகள் வழங்க வேண்டும்.
போரின் போது, உக்ரைனை விட்டு வெளியேற வேண்டிய நிலைமைஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்டது. இந்தியா சவால்களை எதிர்க்கொள்ள உதவும் என நம்புகிறேன்.

ரஷ்யா எனது நாட்டின் இருப்பையே கேள்விக்குறியாக்குகிறது. நமது 1,500 ஆண்டுகால வரலாற்றில், உக்ரைன் எந்த நாட்டையும் தாக்கியதில்லை. உக்ரைன் உண்மையிலேயே, இந்தியாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. இந்தியாவுடன் ஒரு புதிய உறவைத் துவங்க விரும்புகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement