மக்களே, நோட் பண்ணுங்க.. அரசு பேருந்தில் செல்கிறீர்களா.. எந்தெந்த உணவகங்களில் பஸ் நிற்கும் தெரியுமா

சென்னை: தமிழகத்தில் அரசு பேருந்துகள் எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற விவரங்கள் அடங்கிய லிஸ்ட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.. அதில் சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள், உணவு இடைவேளைக்காக நிறுத்தும் உணவகங்கள் மோசமானதாக இருப்பதாகவும, அந்த ஓட்டல்களில் விலை மிகவும் அதிகமாகவும் உள்ளதாகவும் புகார்கள் இருந்து வருகின்றன.

இந்தநிலையில், சமீபத்தில் இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், விழுப்புரம் விக்ரவாண்டி பகுதியிலுள்ள குறிப்பிட்ட ஐந்து உணவகங்களில் மட்டும் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

ஹைவேஸ்: அந்த உணவகங்கள் போல பல உணவகங்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து, அரசுப் பேருந்துகள், குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறையும் உத்தரவிட்டிருந்தது.. இது தொடர்பாக வெளியிட்டிருந்த உத்தரவில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் நெடுந்தூரம் இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட உணவகங்களில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக பேருந்துகளை நிறுத்துவது வழக்கம். தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதாக புகார் எழுந்த நிலையில் போக்குவரத்துத்துறை புதிய உத்தரவைப் பிறக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள்: சென்னையில் இருந்து கோவை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவனில் உணவு அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சேலம், திண்டுக்கல், காரைக்குடி செல்லும் பேருந்துகளின் பயணிகள் வசந்தபவனில் உணவு அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகளின் பயணிகள் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் இடையே அமைந்துள்ள ஸ்ரீபாலாஜி ஆரியாஸ் உணவகத்தில் நிற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எந்தவித புகாருமின்றி பயணிகளின் உணவுக்காக பேருந்துகளை நிறுத்தி முறையாக உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கப்பட்ட விவரம், உணவுக்காக நிறுத்திய விவரங்களை வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது” என்று அந்த அறிவிப்பில் கூறியிருந்தது.. இந்நிலையில், பயணங்களுக்கிடையே தமிழ்நாடு அரசு பேருந்துகள் நிறுத்த அங்கீகாரம் பெற்றுள்ள நெடுஞ்சாலை உணவக முழு பட்டியலை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.

இதான் லிஸ்ட் : தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பெற்றுள்ளதாக வெளியிட்டுள்ள அந்த லிஸ்ட்டில், உணவகங்கள் தரப்பட்டுள்ளன.. அந்த உணவங்கள் அனைத்திலும் கழிவறைகள் பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், சிசிடிவி இருக்க வேண்டும், எம்ஆர்பி-விலைக்கு மேல் விற்கக்கூடாது என்பன போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.. மேலும், MRPக்கு அதிகமாக விற்க கூடாது. கணினி பில் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் அடங்கியுள்ளது.. இதைதவிர, விதிமுறைகளை மீறும் உணவகங்கள் மீது 18005991500 எண்ணில் புகார் அளிக்கலாம். இந்த பட்டியலில் இருக்கும் உணவகங்கள் தவிர வேறு உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டாலும் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோ அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்கள்:

நெல்லை ஆரியாஸ்
மதுரை – தூத்துக்குடி

மேலக்கரந்தை,
தூத்துக்குடி.

ஹோட்டல் அரிஸ்டோ
திருச்சி – சென்னை
விக்கரவாண்டி,
விழுப்புரம்

Total list of authorized restaurants to stop the government express buses in highway in tamil nadu

ஹோட்டல் செந்தூர்
சென்னை – பாண்டி
மரக்காணம்,
விழுப்புரம்

ஹோட்டல் சூர்யா
கிருஷ்ணகிரி – பெங்களூரு

போலுபள்ளி,
கிருஷ்ணகிரி

ஹோட்டல் ECR IN
பாண்டி – சென்னை
கடப்பாக்கம்,
செங்கல்பட்டு

சரவணபவன்
திருப்பதி – வேலூர்
வேப்பம்பள்ளி,
சித்தூர்

சரவண ஜோதி
சேலம் – சிதம்பரம்
சென்னவராம்,
சேலம்

கதிர்மதி காரைக்குடி
அவிநாசி சாலை
அன்னூர்,
கோயம்புத்தூர்

ரமேஷ் ஹோட்டல்
தூத்துக்குடி – மதுரை
மேலகரந்தை,
தூத்துக்குடி

ஹோட்டல் அர்ச்சனா
திருச்சி – சென்னை

சித்திணி, விழுப்புரம்
ஹோட்டல் ஆச்சார்யா
சென்னை – திருச்சி
உளுந்தூர்பேட்டை,
விழுப்புரம்

ஸ்ரீ ஆனந்தபவன்
கிருஷ்ணகிரி – பெங்களூரு
பில்லனகுப்பம்,
கிருஷ்ணகிரி

ஹோட்டல் ஜனனி
சென்னை – திருப்பதி
திருத்தணி,
திருவள்ளூர்

பாலாஜி சரவணபவன்
திருப்பதி –
சென்னை

திருப்பதி, ஆந்திரா
ஆனந்தபவன்

வைகுந்தம்
டோல்கேட்
சங்ககிரி, சேலம்

ரியான்சிகா
உணவகம்
RR நகர்
விருதுநகர்

சரவணபவன்
சென்னை – திருச்சி
விக்கரவாண்டி,
விழுப்புரம்

JP ஹோட்டல்
சென்னை – வேலூர்
பாலுசெட்டிசத்திரம்,
காஞ்சிபுரம்
சரவணபவன்

பெங்களூரு – கிருஷ்ணகிரி
குருபரபள்ளி,
கிருஷ்ணகிரி

வசந்தபவன்
சென்னை – திருச்சி
உளுந்தூர்பேட்டை

கிருஷ்ணபவன்
கோவை – மதுரை
தாராபுரம், திருப்பூர்

ஹோட்டல் ஆரியாஸ்
சேலம் – கோவை
விஜயமங்கலம்,
ஈரோடு

KMS ஹக்கீம் ரெஸ்டாரண்ட்
மதுரை – திருச்சி
மணிகண்டம், திருச்சி

Total list of authorized restaurants to stop the government express buses in highway in tamil nadu

ஸ்ரீ ஆனந்தபவன்
சென்னை – திருச்சி
விக்கரவாண்டி,
விழுப்புரம்

MSC தீப்ஷிகா
வந்தவாசி – திண்டிவனம்
வந்தவாசி,
திருவண்ணாமலை

ஹோட்டல் உதயா
பெங்களூரு – சென்னை
பில்லனகுப்பம்,
கிருஷ்ணகிரி

ஸ்ரீ பிரசன்ன பவன்
சென்னை – திருச்சி
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி

பைரவி ஹோட்டல்
சேலம் – கோவை
செங்கம்பள்ளி,
திருப்பூர்

சரவணபவா
தருமபுரி மெயின்
ரோடு
தருமபுரி

ஹோட்டல் ஆர்த்தி
சேலம் – மதுரை
வேடசந்தூர்,
திண்டுக்கல்

ஸ்ரீ அன்னபூர்ணா
சென்னை – திருச்சி
விக்கரவாண்டி,
விழுப்புரம்

துர்காபவன்
சென்னை –
பெங்களூரு
வேலூர்

ஸ்ரீ சரவணபவன்
கோவை – சேலம்
பல்லக்கபாளையம்,
நாமக்கல்

Total list of authorized restaurants to stop the government express buses in highway in tamil nadu

ஸ்ரீபாலாஜி ஆரியாஸ்
சென்னை – திருச்சி

உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி

அக்ஷயா ஹோட்டல்
கோவை – சென்னை
செங்கம்பள்ளி,
திருப்பூர்

அனிதாபவன்
நெய்வேலி
குறிஞ்சிப்பாடி
கடலூர்

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.