சென்னை : நயன்தாரா சினிமாவை மிஸ்யூஸ் பண்ணதுதான் மார்க்கெட் சரிய முக்கிய காரணம் என்று வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகை நயன்தாராவுக்கு கடந்த ஆண்டு ஓர் சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. திருமணம், ஹனிமூன், இரட்டை குழந்தைக்கு அம்மா என அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறினார்.
சொந்த வாழ்க்கையில் முன்னேற்றங்களை சந்தித்த நயன்தாராவுக்கு பட வாய்ப்பு சரிந்து வருவதால் அவர் மனவேதனையில் இருக்கிறார்.
நடிகை நயன்தாரா : அதிரடி மாஸ் ஹிட் ஹிட் படங்களை கொடுத்த நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு ஓ2, கனெக்ட் போன்ற திரைப்படங்கள் வெளியாகின. “ரௌடி பிக்சர்ஸ்” தயாரிப்பில் உருவான இப்படத்தில் நயன்தாரா, வினய் ராய், ஹனியா நஃபிஸ், சத்யராஜ், அனுபம் கேர் ஆகியோர் நடித்திருந்தனர். 99 நிமிடங்களே ஓடக்கூடிய இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதை கனெக்ட் படம் பூர்த்தி செய்யவில்லை இதனால், நயன்தாராவின் மார்க்கெட் சரிந்து வருகிறது.
கம்மி பட்ஜெட்டில் படம் : இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சினிமா விமர்சகரான வலைப்பேச்சு அந்தணன், நயன்தாரா கம்மி பட்ஜெட்டில் படம் எடுத்தால் போதும், நம்ம பெயருக்கும் மார்க்கெட்டில் நல்ல பெயர் இருக்கு, நாம் எடுக்கும் படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள், டிஜிட்டல் நிறுவனம் முன்வருகிறது. இதனால்,கம்மி பட்ஜெட்டில் படத்தை எடுத்து யார் தலையிலாவது கட்டிவிடலாம் என்று நயன்தாரா நினைக்கிறார்.
பாக்கெட் நிறைந்தால் போதுமா : கனெக்ட் என்கிற படத்தில் நயன்தாரா நடித்திருந்தார் அதுவே அறம் மாதிரி கதைக்களம் கொண்ட ஒரு படத்தை எடுத்து அதில் அவர் நடித்திருந்தால், நயன்தாரா மார்க்கெட்டை யாராலும் அசைத்து இருக்க முடியாது. ஆனால், கமர்ஷியலாக ஒரு படத்தை எடுத்து பாக்கெட் நிறைந்தால் போதும் என்று நினைத்தால், அந்த இடத்தில் இயற்கை நிச்சயம் தண்டனை கொடுத்துவிடும்.

மிகப்பெரிய ஆபத்து : நயன்தாராவை வளர்ந்து விட்டது சினிமாதான், சினிமாவை நீங்கள் மிஸ்யூஸ் பண்ணும் போது, மார்க்கெட் தானே கீழே சரிந்து விடும். இந்த தவறை நயன்தாரா செய்ததுதான், அவரின் மார்க்கெட் பின்னடைவுக்கு மிகப்பெரிய காரணம். அது மட்டுமில்லாமல் தொடர்ந்து அதே தவறை அவர் செய்துக் கொண்டே இருக்கிறார்கள் இது அவருக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

வெற்றி பெற வாய்ப்ப உண்டு : அடுத்த ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து அவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு வரலாம். மேலும்,ஜெயமாலினி, ஜெயபிரதா, ஸ்ரீதேவி அனைவருமே திருமணத்திற்கு பிறகுதான் பாலிவுட்டில் ஜெயிதார்கள். அதே போல திருமணமான நடிகைகளை பாலிவுட்டில் ரசிக்கிறார்கள் என்பதால்,நயன்தாரா பாலிவுட்டில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கு என்று வலைப்பேச்சு அந்தணன் பேட்டி கூறியுள்ளார்.