2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா-வில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த சத்யபால் மாலிக் 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு மத்திய பாஜக அரசின் மெத்தனமே காரணம் என்று குற்றம்சாட்டினார். சம்பவம் நடைபெற்ற போது அம்மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக்-கின் இந்த குற்றச்சாட்டு நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு சி.ஆர்.பி.எப். […]
