சிக்கலில் பிடிஆர்… டென்க்ஷனில் திமுக.. நாளையே மாற்றிய ஒற்றை ஆடியோ..!

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், திமுக அரசுக்கும் மிகப்பெரிய சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பிடிஆர் டெல்லி செய்தியாளரிடம் பேசியதாக கூறி 29 நொடிகள் கொண்ட ஆடியோவை சவுக்கு சங்கர் பகிர்ந்துள்ளார்.

அந்த ஆடியோவில், ‘‘ஒரே வருடத்தில் உதயநிதி ஸ்டாலினும், ஸ்டாலின் மருமகன் சபரீசனும் சேர்ந்து 30 ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதித்துள்ளனர். இந்த தொகையை இவர்களது மூதாதையர்கள் கூட சம்பாதிக்கவில்லை. இந்த பணத்தை இவர்கள் எப்படி கையாள போகிறார்கள் என்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என்று அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த ஆடியோ பகிரப்பட்டு 7 மணி நேரம் ஆகியும்கூட இதுகுறித்து மறுப்போ அல்லது விளக்கமோ பிடிஆர் தெரிவிக்காமல் இருப்பது திமுக ஆதரவாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்மிளா

இதுகுறித்து விசிக எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜியின் மனைவி சர்மிளா மட்டுமே ட்வீட் போட்டுள்ளார். அதில்,‘‘ஆடியோ விவகாரம் உங்களது மறுப்புக்காக காத்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் உங்கள் நம்பகத்தன்மைக்கும், அரசாங்கத்திற்கும் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அண்ட் ட்வீட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனையும் டேக் செய்துள்ளார். இதற்கு மத்தியில் குறிப்பிட்ட ஆடியோவை வெளியிட்ட சவுக்கு சங்கர் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர் கருத்து

” இது அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், ஒரு பத்திரிகையாளருக்கும் இடையிலான நடந்த தனிப்பட்ட உரையாடல் அல்ல. கடந்த இரண்டு வருடங்களாக நானும் பலபேரும் இதைத்தான் கூறி வருகிறோம். அந்த வகையில் அமைச்சர் பிடிஆரும் திமுக அரசின் மீதுள்ள தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒருவேளை அமைச்சர் கூறிய கருத்தில் உண்மை இல்லை என்றால் முதல்வர் ஸ்டாலின் அவரை பதவியில் வைத்திருக்க கூடாது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், பிடிஆர் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலினுக்கு முதுகெலும்பு இல்லை அல்லது அமைச்சர் சொன்னது உண்மை என்றுதான் அர்த்தம்” என்று சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

அமைச்சரின் ஆடியோ விஷயத்தில் சவுக்கு சங்கர் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில் இதுகுறித்து அமைச்சர் மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது; திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்காமல் இருப்பது; விவாத பொருளாக மாறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.