புல்வாமா அட்டாக்: பாஜகவின் கோர முகத்தை அம்பலபடுத்திய சத்யபால் மாலிக்.. சம்மன் அனுப்பிய சிபிஐ.!

புல்வாமா தாக்குதல் நடைபெற்றதும், அதற்கு அடுத்து வந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையும் அம்பலப்படுத்திய சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

புல்வாமா தாக்குதல்

கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது நாட்டின் ஆன்மாவை உலுக்கியது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்கம் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. அனைத்து கட்சி தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு இரங்கலை தெரிவித்து வந்த நிலையில், பிரதமர் தொலை தொடர்பு வசதிகளே பூங்காவில் சூட்டிங் நடத்திக் கொண்டிருந்தார்.

இந்த சூழலில் பாகிஸ்தானுக்குள் சென்று இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளின் முகாம்களை அழித்ததாக ஒன்றிய பாஜக அரசு தெரிவித்தது, ஆனால் பாகிஸ்தான் அரசு அதை மறுத்தது. புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் அதே ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ‘‘உங்கள் வாக்குகளை செலுத்தும்போது, புல்வாமா சம்பவத்தை நினைத்து கொண்டு வாக்களியுங்கள்’’ என்று பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் வேட்டை

ராணுவ வீரர்களின் மரணமும், சர்ஜிகல் ஸ்ட்ரைக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலித்து பாஜக அதிக பெரும்பான்மையை தந்தது. பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். இந்த சூழலில் புல்வாமா தாக்குதலில் ஒன்றிய அரசின் குறைபாடுகளை குறித்து பேசக்கூடாது என ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவால் நியமிக்கப்பட்ட கடைசி ஆளுநர் சத்யபால் மாலிக்கை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக ஒரு நேர்காணலில் தெரிவித்தது, ஒத்து மொத்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனியார் செய்தி ஊடகத்திற்கு சத்யபால் மாலிக் அளித்த நேர்காணலில், ‘‘துணை ராணுவப்படையில் செல்ல விமானம் கேட்கப்பட்டது. ஆனால் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் மறுத்தார். சாலை மார்க்கமாக ராணுவத்தினரை அழைத்து செல்ல கட்டளை இட்டார். ஜம்மு காஷ்மீரில் சில நாட்களாக வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று உலாவி வருவதாக வந்த உளவு தகவல்கள் மட்டுப்படுத்தப்பட்டு, சாலை வழியே ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர்.

கம்முனு இரு

சொன்னபடியே தாக்குதல் நடந்த அன்று, பிரதமர் தொலை தொடர்பு வசதி இல்லாத பூங்காவில் சூட்டிங்கில் இருந்தார். சம்பவம் நடந்த பல மணி நேரங்களுக்கு பிறகு என்னை தொடர்பு கொண்ட பிரதமர், நமது தவறுகளை வெளியில் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதேபோல் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இதை ஊதிப் பெரிதாக்காதீர்கள் என கட்டளை இட்டார்’’ என சத்யபால் மாலிக் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு இன்று சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க கோரி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர் ராம் மாதவ் என்னை வற்புறுத்தினார் என்று சத்யபால் மாலிக் சொன்னதற்காக, வருகிற 28ம் தேதி ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே பாஜகவை எதிர்க்கும் நபர்களை குறிவைத்து சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட எஜென்சிகள் அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளதும் குறிப்பிடதக்கது. ஆனால் இதற்கெல்லாம் தான் அஞ்சப்போவதில்லை என சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.