2026இல் இந்திய அணி விளையாடும் போட்டிகள்… ஜனவரி டூ டிசம்பர் வரை – முழு அட்டவணை

Team India Schedule 2026: 2025ஆம் ஆண்டில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு சிறப்பான ஆண்டு என்றும் சொல்ல முடியாது, சுமாரான ஆண்டு என்றும் சொல்ல முடியாது. இந்தாண்டின் தொடக்கத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது, சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

Add Zee News as a Preferred Source

Team India: 2025இல் இந்திய அணிக்கு நடந்த சோதனைகள்…

அடுத்து ஜூன் மாதம் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெறவே இல்லை. 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் நடந்த இரண்டு WTC இறுதிப்போட்டிகளுக்கும் இந்தியா தகுதிபெற்றிருந்தது, ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. அதற்கடுத்து விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதை தொடர்ந்து, இங்கிலாந்து சென்ற இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. அதன்பின் சொந்த மண்ணில் மேற்கு இந்திய தீவுகள் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தினாலும், அடுத்து தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கிடையே ஆஸ்திரேலிய மண்ணில் ஓடிஐ தொடரையும் 1-2 என்ற கணக்கில் இழந்தது. ஆனால், டி20ஐ பொருத்தவரை இந்திய அணி சிறப்பாகவே உள்ளது. ஆசிய கோப்பையை கைப்பற்றியது உள்பட எந்த தொடரையும் இந்திய டி20ஐ அணி இழக்கவே இல்லை. ஓடிஐ அணியும் ஓரளவுக்கு செட்டாகிவிட்டது, டெஸ்ட் அணி மட்டுமே இன்னும் சீராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Team India: 2026இல் டி20 உலகக் கோப்பையே டார்கெட்

இந்நிலையில், இந்திய அணி தற்போது 2026ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்தாண்டின் பிப்ரவரி – மார்ச்சில் சொந்த மண்ணிலும், இலங்கையிலும் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பைதான் இந்திய அணியின் அதிமுக்கிய டார்கெட்டாக உள்ளது. இதுவரை எந்த அணியும் தொடர்ந்து இரண்டு முறை ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை. அந்த வகையில், இந்த முறை கோப்பையை தக்கவைக்கும் வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகமாக உள்ளது. 

Team India: 2026இல் இந்திய அணியின் முழு அட்டவணை

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை மட்டுமின்றி இந்தாண்டு பல்வேறு சுற்றுப்பயணங்களும் இந்திய அணியின் அட்டவணையில் உள்ளன. அந்த வகையில், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இந்திய அணியின் அட்டவணை எப்படி இருக்கும் என்பதை இங்கு காணலாம். 

Team India: இந்தியா வரும் நியூசிலாந்து அணி

நடப்பு ஜனவரியில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையே வரும் ஜனவரி 11, 14, 18 ஆகிய தேதிகளில் முறையே வதோதரா, ராஜ்கோட், இந்தூர் ஆகிய நகரங்களில் மூன்று ஓடிஐ போட்டிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து, ஜனவரி 21, 23, 25, 28, 31 ஆகிய தேதிகளில் முறையே நாக்பூர், ராய்ப்பூர், கௌகாத்தி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் ஐந்து டி20ஐ போட்டிகள் நடைபெற உள்ளன. 

Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை

பிப்ரவரி மாதத்தில் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இதன் இறுதிப்போட்டி மார்ச் 8ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. குரூப் சுற்றை பொருத்தவரை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி மும்பையில் அமெரிக்கா அணியையும், பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லியில் நமீபியா அணியையும், பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் பாகிஸ்தான் அணியையும், பிப்ரவரி 18ஆம் தேதி அகமதாபாத் நகரில் நெதர்லாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது. இந்திய அணி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்பட்சத்தில், அடுத்து இறுதிப்போட்டி வரை மொத்தம் 5 போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது.

Team India: இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் அணி

ஐசிசி டி20 உலகக் கோப்பை மார்ச் தொடக்கத்தில் நிறைவடைந்த பின்னர், மார்ச் கடைசி வாரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கும். ஐபிஎல் தொடர் மே மாதம் இறுதிவரை நீளும். அதுவரை இந்திய அணி எந்தவித சர்வதேச போட்டிகளிலும் விளையாடாது. ஐபிஎல் தொடருக்கு பின் ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கு ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகளில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. போட்டியின் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. 

Team India: இங்கிலாந்து செல்லும் இந்திய அணி

2025ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே இந்திய அணி விளையாடியது. தற்போது 2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் டி20ஐ மற்றும் ஓடிஐ தொடர்களை விளையாட இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது. ஜூலை 1, 4, 7, 9, 11 ஆகிய தேதிகளில் 5 டி20ஐ போட்டிகளும், ஜூலை 14, 16, 19 ஆகிய தேதிகளில் 3 ஓடிஐ போட்டிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. 

Team India: இலங்கை செல்லும் இந்திய அணி

ஆகஸ்ட் மாதம் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாட இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. WTC புள்ளிப்பட்டியலில் இந்தியா கவலைக்கிடமாக உள்ள நிலையில், இனி வரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. கடந்த நவம்பரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா உடன் மோதிய டெஸ்ட் தொடருக்கு பின், இலங்கை தொடர்தான் WTC தொடருக்கானதாகும். ஆப்கானிஸ்தான் அணி WTC தொடரில் வராது. எனவே சுமார் 9 மாதங்களுக்கு பின் இந்திய அணியின் டெஸ்ட் தொடராக இது இருக்கும். 

Team India: செப்டம்பர் – அக்டோபர் 

இலங்கை டெஸ்ட் தொடருக்கு பின், வெளிநாட்டில் ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 டி20ஐ போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அதற்கடுத்து ஆசிய கோப்பை தொடர் நடைபெறுகிறது. அதன்பின், உள்நாட்டிலேயே இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் மூன்று ஓடிஐ மற்றும் 5 டி20ஐ போட்டிகளில் விளையாட உள்ளது. 

Team India: நியூசிலாந்து செல்லும் இந்திய அணி

நவம்பர் மாதம் இந்திய அணி நியூசிலாந்து சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளது. இத்தொடரும் WTC இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்திய அணிக்கு முக்கியமானதாகும். அடுத்து அங்கேயே மூன்று ஓடிஐ, ஐந்து டி20ஐ போட்டிகளை இந்திய அணி விளையாட உள்ளது. 

Team India: இந்தியா வரும் இலங்கை அணி

இந்தியா இலங்கைக்கு ஆகஸ்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெறும் 2 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே விளையாடும். ஓடிஐ மற்றும் டி20ஐ போட்டிகளை விளையாட இலங்கை அணி டிசம்பரில் இந்தியா வருகிறது. இங்கு மூன்று ஓடிஐ, ஐந்து டி20ஐ போட்டிகளை இந்தியா – இலங்கை அணிகள் விளையாட உள்ளன.

மேலும் படிக்க | 2026 டி20 உலகக் கோப்பையில் இருக்கும் சிக்கல்.. கேப்டனால் கவலை – முழு விவரம்!

மேலும் படிக்க | ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதில்… இந்திய அணிக்குள் வரும் முக்கிய வீரர் – பலமாகும் ஓடிஐ ஸ்குவாட்

மேலும் படிக்க |   157 ரன்களை அதிரடியாக அடித்த CSK வீரர்… இதனால் பிளேயிங் லெவனில் எந்த வீரருக்கு ஆப்பு?

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.