
கஸ்டடி படத்தின் ‛டைம்லெஸ் லவ்' பாடல் வெளியானது!
மாநாடு படத்தை அடுத்து தமிழ் – தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கி உள்ள படம் கஸ்டடி. தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் கிருத்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் வெங்கட் பிரபு களம் இறங்கி இருப்பதை போன்று, முதன்முதலாக நாகசைதன்யா தமிழில் களமிறங்குகிறார். இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள டைம்லெஸ் லவ் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடலை கபில் கபிலன் பாடி இருக்கிறார்.