வாஷிங்டன் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் சக பயணி மீது போதையில் சிறுநீர் கழித்த இந்தியர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘ஏ.ஏ. – 292’ விமானம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து நேற்று முன்தினம் இரவு புதுடில்லி வந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்தபோது, இதில் பயணித்த இந்தியர் ஒருவர் சக பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
குடி போதையில் இருந்த இவர், தகராறின் உச்சக்கட்டத்தின் போது, சக பயணி மீது சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. விமான ஊழியர்களிடமும் இவர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து புதுடில்லி விமான நிலைய சிவில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்குள்ள மத்திய பாதுகாப்புப் படை போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புதுடில்லியில் தரையிறங்கிய விமானத்தில் இருந்த இந்தியரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக எந்த ஆதராமும் சமர்பிக்காத சூழலில்,பாதிக்கப்பட்ட பயணியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement