சென்னை: Keerthy Suresh (கீர்த்தி சுரேஷ்) ஆறு மாதங்களாக தனக்கு பட வாய்ப்பு எதுவுமே வரவில்லை என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.
இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். முதல் படத்திலேயே பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி நல்ல நடிகை என்ற பெயர் எடுத்தார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன் மெகா ஹிட்டானது. குறிப்பாக உன் மேல ஒரு கண்ணு பாடலில் கீர்த்தி சுரேஷின் எக்ஸ்ப்ரெஷன் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. இதனையடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு குவிய ஆரம்பித்தனர்.
முன்னணி நடிகை: அதனையடுத்து விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், ரஜினியுடன் அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து அதகளம் செய்தார். குறிப்பாக நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்ததன் காரணமாக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
மாமன்னன்: இருப்பினும் தமிழில் அவருக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருந்தது. தற்போது அவர் மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகிறது. படத்தில் கம்யூனிஸ்ட்டாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீர்த்தி பேட்டி: இந்நிலையில் மாமன்னன் படத்தை முன்னிட்டு ப்ரோமோஷனில் கலந்துகொண்டிருக்கும் கீர்த்தி பல பேட்டிகளை அளித்துவருகிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், “சில நேரங்களில் எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம் வரும். அதிலிருந்து மீண்டு வரவும் முடிந்தது. மகாநடி படத்திற்கு பிறகு எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நல்ல பெயரும் கிடைத்தது. அதன்பிறகு 6 மாதங்களாக எனக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இப்போ வந்துடும் அப்போ வந்துடும் என்று நினைத்தேன். ஆனாலும் வரவில்லை. அந்தப் படத்துக்கு பிறகு என்ன செய்யலாம் என யோசித்தேன்
கமர்ஷியலை விரும்பினேன்: எனக்கு கமர்ஷியல் படம் நடிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் எனக்கு கதாநாயகியை மையப்படுத்திய கதைகளாக வந்தது. கமர்ஷியல் படங்கள் பண்ண வேண்டும் என்பதற்காக 3,4 மாதங்களுக்கு கதாநாயகி ஓரியண்டட் கதைகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பார்த்தால் எனக்கு பொருளாதார ரீதியாகவும் தேவை இருக்கு. அதனால் அது போன்ற கதாநாயகி மையப்படுத்தி வரும் படங்களையும் நடிக்க தொடங்கினேன்” என்றார்.
லவ் லெட்டர்: அதேபோல் அவர் அளித்த மற்றொரு பேட்டியில், “எனக்கு ஒருத்தர் தொடர்ந்து காதல் கடிதம் அனுப்பிக்கொண்டே இருந்தார். என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அதில் எழுதியிருந்தார். அதில் அவரின் பெயர், முகவரி எல்லாமே இருக்கும். பதிலுக்கு அவரும் என்னிடம் இருந்து ரிப்ளை எதிர்பார்ப்பார். ஆனால் நான் பதில் கடிதம் எதுவும் அனுப்பவில்லை.
கணவர்னு ஒருத்தர் வந்தார்: கொஞ்ச நாளைக்கு முன்பு, ஒருவர் என் வீடு தேடியே வந்துவிட்டார். அவர் பார்க்க வேற மாதிரி இருந்திருக்கிறார். அப்போ நான் சென்னை வீட்டில் இல்லை. வீட்டில் வேலை செய்பவர்களிடம் அவ எதுக்கு உதயநிதி கூடலாம் படம் பண்றானு கேட்டாராம். இதையெல்லாம் கேட்டப்போ, டேய் யார்ரா நீனு தோணுச்சு. அப்புறம் உதயநிதி கிட்டயே இதை சொன்னேன்.அதே ஆள் கேரளாவில் இருக்கிற என் அம்மா வீட்டுக்கெல்லாம் சென்று அவங்களிடம் எல்லாம் பேச முயற்சித்திருந்தார்” என்றார்.