தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிய நம்பிக்கை… அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்கள் உடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் அனைவரது கோரிக்கைகளையும் பொறுமையாக கேட்டுக் கொண்டார்.

ஆசிரியர்களின் கோரிக்கைகள்

நீண்ட கால கோரிக்கைகள், புதிய கோரிக்கைகள் ஆகியவை அடங்கிய கோரிக்கை மனுக்களை கவனத்துடன் படித்து பார்த்தார். அதுதொடர்பான மேலும் விவரங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். இவை அனைத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் ஆலோசனை

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் சுமார் 10 மணி நேரத்தை கடந்து நள்ளிரவு 12.20 மணிக்கு நிறைவு பெற்றது. இதற்கிடையில் ஜூலை 28ஆம் தேதி ஆசிரியர்கள் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு இரட்டை ஊக்கத்தொகை,

மீண்டும் ஆலோசனை

ஆசிரியர்களின் பதவிக் காலத்தின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் அடுத்தகட்ட ஆலோசனை நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பல்வேறு கோரிக்கைகள் ஆசிரியர்களிடம் இருந்து வந்துள்ளன.

தங்கம் தென்னரசு வழிகாட்டுதல்

இவற்றுக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்படும். கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்து தற்போது நிதித்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு அவர்களையும் அழைத்து ஒரு விரிவான அறிக்கை தயாரித்து கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

மாற்று வழிகள் என்ன?

இதற்காக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உடன் நேரம் கேட்டுள்ளோம். அவரது அனுமதி கிடைத்ததும் அமர்ந்து பேசி, ஒவ்வொரு கோரிக்கைக்கும் எவ்வாறு தீர்வு காணலாம்? மாற்று வழிகள் என்னவென்று? முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.