
மீண்டும் ஜோடி சேரும் ரவி தேஜா – ஸ்ரீ லீலா கூட்டணி
கடந்த 2022ம் ஆண்டில் ரவி தேஜா, ஸ்ரீ லீலா இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் தமாகா. இந்த படத்திற்கு பிறகு ஸ்ரீ லீலா தெலுங்கில் ஒரு டஜன் படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் ரவி தேஜா புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.